பழங்கள், காய்கறிகள் போல நீங்கள் மருந்துகளை 10 நிமிடங்களில்ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்து பெற முடியாது. பெரும்பாலும், சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். இதை நம்பவே முடியவில்லையா? ஆனால் இதுதான் உண்மை.
நம்மூரில் தக்காளி, வெங்காயம் 10 நிமிடத்தில் கிடைக்கிறது. ஆனால் உயிருக்கு அவசியமான மருந்துகள் கிடைக்க அதிக நேரம் ஆகிறது,” என்கிறார் Repill நிறுவனத்தின் நிறுவனர் ரஜத் குப்தா. அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில், டாக்டர்கள் நேராக மருந்தகங்களுக்கு நோயாளிகளுக்கு தேவையான மருந்து பட்டியலை அனுப்பி விடுகிறார்கள். அவர்கள் உடனே நோயாளிகளின் வீட்டுக்கே மருந்துகளை டெலிவரி செய்துவிடுவார்கள். ஆனால் இந்தியாவில், நம்மால் எங்கெங்கோ சென்று தேடித்தான் அந்த மருந்துகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த மாதிரியான சூழ்நிலைகள் இந்தியாவெங்கும் பொதுவாகவே நடக்கின்றன. குழந்தைகள் இரவில் திடீர் உடல்நிலை பாதிப்பை சந்திக்கும் போது, பெற்றோர் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். வயதானவர்கள், வேதனைக்கிடையில், ஒரு மருந்தகத்தில் இருந்து மற்றொன்றுக்கு சென்று அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் தவிக்க நேர்கிறது. பலருக்கு, மருந்துகளை நேரத்துக்குள் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கான தீர்வாக இந்த ஆண்டு ஜனவரியில், டெல்லியைச் சேர்ந்த தொழில்முனைவோர் ரஜத் குப்தா, ஆன்லைன் மருந்து விநியோக பிளாட்பாரம் Repill-ஐ தொடங்கினார்.
Repill என்பது உணவு டெலிவரி செயலிகளைப் போலவே இயங்கும், டெல்லி மையமாகக் கொண்ட மருந்து டெலிவரி பிளாட்பாரம். வாடிக்கையாளர்கள், பரிந்துரை செய்யப்பட்ட மற்றும் பரிந்துரை இல்லாத மருந்துகளையும் ஆர்டர் செய்து 60 நிமிடங்களில் பெற்று கொள்ள முடியும்.
“பரிந்துரை மருந்துகளுக்கு வாடிக்கையாளர்கள் மருத்துவரின் prescription ஐ அப்லோடு செய்ய வேண்டும். பரிந்துரை இல்லாத மருந்துகளுக்கான ஆர்டர்களை நேரடியாகப் போடலாம்,” என்கிறார் ரஜத்.
மருந்துகள் கிடைக்கும் நிலைமையை 7 முதல் 9 கிமீ வரை உள்ள மருந்தகங்களில் தேடி கண்டறிந்து, Repill விரைவில் டெலிவரி செய்து விடுகிறது.
“நாங்கள் dark store-களில் இருந்து இயங்கவில்லை. பதிலாக உள்ளூர் மருந்தகங்கள் எங்களுடன் இணைந்துள்ளன. அதனால் தான் இந்த அளவிற்கு வேகமாக டெலிவரி செய்ய முடிகிறது,” என்கிறார் ரஜத்.
மேலும், “பிற ஆன்லைன் பிளாட்பாரங்களில் உள்ளூர் வியாபாரிகள் வியாபாரத்தை கெடுக்கின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கூடுதல் வியாபாரம் தருகிறோம்,” என அவர் கூறுகிறார்.
“நம் நாட்டில் உணவு 10 நிமிடத்தில் வந்துவிடும், ஆனா உயிருக்கு தேவையான மருந்துகள் ஒரு சில மணி நேரம் எடுக்கின்றன. இதைத் தான் மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். 2023ஆம் ஆண்டு அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி, Repill-ஐ தொடங்கினேன் என்று தெரிவித்தார்.
இப்போது டெல்லியில் செயல்படும் Repill, 400-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை டெலிவரி செய்து முடித்துள்ளது. நொய்டா, பின் குர்கான், பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் விரைவில் தொடங்க உள்ளதாக ரஜத் கூறுகிறார்.
“Tier 2, Tier 3 நகரங்களில் ஆரம்பித்தால் தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்கிறார் ரஜத்.