OnePlus நிறுவனத்தின் முதல் ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்.. சாம்சங், மோட்டோரோலாவுக்கு போட்டியா?

Published:

சாம்சங் மற்றும் மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் ஃபோல்டிங் ஃபோன்களை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் தற்போது OnePlus நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக முதல் ஃபோல்டிங் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Samsung’s Galaxy Z Fold மற்றும் Motorolaவின் Razr ஆகிய ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் வகையில் எதிர்பார்க்கப்படும் OnePlus ஃபோல்டிங் குறித்த சில விவரங்கள் இதோ:

* 7.8 இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே
* 5.8 இன்ச் வெளிப்புற காட்சி
* ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராஸசர்
* 12 ஜிபி ரேம்
* 512 ஜிபி ஸ்டோரேஜ்
* 4,500mAh பேட்டரி
* 108MP பிரதான கேமரா
* 16எம்பி அல்ட்ராவைடு கேமரா
* 12எம்பி டெலிஃபோட்டோ கேமரா
* 32எம்பி செல்பி கேமரா

OnePlus மடிக்கக்கூடிய ஃபோல்டிங் போனின் விலை சுமார் $1,500 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.1,24,000 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus ஒரு பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உயர் செயல்திறன் மற்றும் பல சிறப்பம்சங்களுக்கு பெயர் பெற்றது. ஃபோல்டிங் போன் சந்தையில் OnePlus நிறுவனத்தின் நுழைவு அந்த துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.

ஃபோல்டிங் சந்தையை பொருத்தவரை போட்டி என்பது தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது, சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களுடன் OnePlus மோதி வெற்றிபெற, அதன் தயாரிப்பில் கண்டிப்பாக வேறுபடுத்த வேண்டும்.

மேலும் ஃபோல்டிங் ஃபோன்கள் பல தோல்வியை பெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் இன்னும் பல சவால்களை சமாளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஃபோல்டிங் என்ற சிறப்பம்சங்கள் மட்டுமின்றி நீண்ட ஆயுள் பேட்டரி, சிறப்பான கேமிரா, கேமிங்ற்கு உகந்தது உள்பட பலவித சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒன்பிளஸ் ஃபோல்டிங் சந்தையில் நுழையும் போது பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அந்நிறுவனம் இன்னும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...