ஒரு சவரன் தங்கம் ரூ.5 லட்சம் வரும்.. எப்போது தெரியுமா? நகை விற்பனையாளர் கணிப்பு..!

தற்போது ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு சவரன் 5 லட்ச ரூபாய் வரை உயரும் என்று நகைக்கடை விற்பனையாளர் ஒருவர் கணித்துள்ளது…

Gold

தற்போது ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு சவரன் 5 லட்ச ரூபாய் வரை உயரும் என்று நகைக்கடை விற்பனையாளர் ஒருவர் கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகிறது என்பதும் இந்தியாவில் தங்கத்திற்கான வரி குறைப்பு காரணமாகத்தான் சமீபத்தில் தங்கம் விலை சரிந்தாலும் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது ஒரு சவரன் தங்கம் சுமார் 53 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2034 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு சவரன் 5 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு உயரும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களால் வாங்க முடியாத நிலையில் தங்கத்தின் விலை தற்போது இருக்கும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயரும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி இருப்பதை அடுத்து தங்கம் என்பது ஏழை எளியவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க டாலர் மற்றும் தங்கத்துடன் இருக்கும் தொடர்பு கொடுத்து ஆய்வு செய்து வரும் நகை வியாபாரி ஒருவர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை 50% அதிகமாக உயர்ந்து உள்ளதாகவும், தங்கத்தில் முதலீடு செய்தால் கண்டிப்பாக நஷ்டம் வராது, ஆனால் அதே நேரத்தில் இரண்டு ஆண்டுகளில் 50% லாபம் தந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இனி வருங்காலத்தில் தங்கத்தின் விலை மிக அதிகபட்சமாக உயரும் என்றும் அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் விலை ஐந்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம் அமெரிக்க டாலரின் போக்கு மற்றும் தங்கத்தின் உற்பத்தி குறைவு என்றும் கூறப்படுகிறது.