ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் தான் செலவு.. டாடாவின் சூப்பர் எலக்ட்ரிக் கார்..!

Published:

 

ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் டாட்டாவின் புதிய கார் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் தயாரித்து வரும் நிலையில் டாடா நிறுவனம் டாடா கர்வ் என்ற எலக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு 17.49 முதல் 21.99 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கார் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 2 பேட்டரி இருப்பதாகவும்,  45kWh, 55kWh என அமைக்கப்பட்ட இந்த கார் 5 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Creative, Accomplished, Accomplished +S, Empowered+, Empowered+ A  என அறிமுகமாகியுள்ள இந்த கார்கள் இரண்டு பெரிய பேட்டர்களை கொண்டது.

அதிகபட்சமாக 160 கிமீ வேகம் செல்லும் இந்த கார் 15 நிமிடங்களில் 150 கிமீ தூரம் போகும் வரை சார்ஜ் ஏறும். 40 நிமிடங்களில் 20-80% வரை சார்ஜ் ஏறிவிடும்.  இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 585 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். அதாவது ஒருமுறை சார்ஜ் செய்ய 500 ரூபாய் செலவு என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே இந்த கார் செலவு வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...