நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் கூட, அனைத்து ஆவணங்களும் டைப் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. நவீன கருவிகள், சீரான டிஜிட்டல் பணிமுறை ஆகியவற்றுக்கு மத்தியில், இது மிகவும் பின்னடைவு போல இருந்தது.
இந்த அலுவலகத்தின் வேலை நேரம், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, அதாவது 12 மணி நேரம்! இதுபோன்ற வேலை நேரம் இருந்தால் மற்ற வேலைகள் குடும்ப பொறுப்புகளை எப்படி கவனிக்க முடியும்.
முதல் நாளிலேயே இந்த வேலையில் நாம் தொடர வேண்டுமா? என்ற சந்தேகம் வந்தது. வேலையை விட்டுவிடலாமா? என யோசித்தபோது கூடவே ஒரு பெரிய பயம் இருந்தது. அது ‘Absconding’ என்ற குற்றச்சாட்டை Provident Fund இந்நிறுவனம் பதிவு செய்தால், அதை எதிர்கொள்வது மிகவும் கடினம். அது எதிர்கால வேலை வாய்ப்புகளை பாதிக்கக்கூடியதாக இருந்தது. அதனால் உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்’ என்று பதிவு செய்திருந்தார்.
அவருடைய பதிவுக்கு பலரும் தனது அனுபவத்தை பகிர்ந்து, நீங்கள் வேலையை விட்டு யோசிக்காமல் விலகுங்கள் என ஊக்குவித்து, PF பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்று சில ஆலோசனைகள் வழங்கினர்.
ஒருவர் நகைச்சுவையாக “அந்த நிறுவனம் உங்களை ‘absconded’ என்று குறித்தால், எதிர்கால வேலை வாய்ப்புகளில், ‘நான் டைம் மெஷினில் போய்விட்டு வந்தேன்’ என்று சொல்லி விடுங்கள்!” என்றார். இன்னொருவர் “நான் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். ஆனால் அது 1975-ம் ஆண்டுக்கு போய் விட்டது. டைப் மெஷின், ஃபேக்ஸ் மெஷின்கள் இடையே ஓடி ஓடி வேலை பார்த்தேன். இறுதியில், தினமும் ஓட்டம் எடுக்கும் டைனோசர் ஒன்றை தரப்போவதாக கேட்டதும், வேலை விட்டு வெளியே வந்தேன்!” என்றார்.
இன்னொரு நபரோ உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு டிஜிட்டல் குறித்து ஆலோசனை கூறுங்கள். டிஜிட்டல் மேம்பாடுகள் குறித்து பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் இதைப் முன்னிலைப் படுத்த தயாராக இருப்பதை கூறுங்கள். அவர்கள் மாற்றத்திற்குத் தயாரில்லை எனில், வேலை விட்டு விடுங்கள்!” என்றார்.