ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீரர் வெண்கல பதக்கம் பெற்றதை அடுத்து அவருக்கு பஞ்சாப் அரசு வேலை அளித்தது, ஆனால் அந்த அரசு வேலையை அந்த வீரர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
பாரிஸ் நகரில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட சில வீரர்களும் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
குறிப்பாக துப்பாக்கி சூடு போட்டியில் இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கி சூடும் தனிப்பிரிவில் மனு பார்க்கர் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் அதனை அடுத்து சரப்ஜோத் சிங் உடன் சேர்ந்து மீண்டும் வெண்கல பதக்கம் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் அவர்களுக்கு பஞ்சாப் அரசு வேலை தருவதாக அறிவித்தது. ஆனால் அந்த வேலை தனக்கு வேண்டாம் என்றும் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என்பது தனது கனவு என்றும் அதை நோக்கி தனது கவனத்தை செலுத்த உள்ளதாகவும் கூறினார்.
தான் ஒரு அரசு வேலையில் செய்ய வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் நீண்ட நாள் ஆசை என்றும் அரசு கொடுத்து இருக்கும் வேலையும் நல்ல வேலை தான் என்றும் ஆனால் அதைவிட எனக்கு என் கனவு தான் முக்கியம் என்றும் எனக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
என் கனவை நனவாக்க நான் தினமும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசு வேலையில் சேர்ந்தால் என்னால் என் கனவை நோக்கி பயணம் செய்ய முடியாது, அரசு வேலையை பெற்று நான் என் கனவை சிதைத்து கொள்ள முடியவில்லை. எனவே இப்போதைக்கு என்னால் அரசு வழங்கிய பணியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.