2020-ஆம் ஆண்டு, குருகிராமை சேர்ந்த இளம் தொழிலதிபர் யுக் பாட்டியா, பழைய ஸ்மார்ட்போன்களை புதியது போல் மாற்றும் நோக்கில் ControlZ என்ற நிறுவனத்தை துவக்கினார். தற்போது இந்த நிறுவனம் ஆண்டு ரூ.25 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருமானத்தை ரூ.100 கோடியாக உயர்த்தும் திட்டத்தில் அவர் நடக்கிறார்.
ControlZ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் யுக் பாட்டியா, ஸ்மார்ட்போன்கள் Refresh செய்யும் புதுமையாக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு ஒரு பழைய போன் வந்தவுடன் முதலில் அதைப் பற்றிய முழுமையான பரிசோதனை நடத்தப்படுகிறது. வெறும் மேற்பரப்பு சோதனை மட்டுமின்றி ஒவ்வொரு உதிரிப் பாகத்தையும் ஆய்வு செய்து, பழுதாகியிருந்தால் அதை மாற்றும் “Component-level renewal” அணுகுமுறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
திறமையான பொறியாளர்கள், பேட்டரி, கேமரா, டிஸ்பிளே போன்ற முக்கிய பகுதிகளை மட்டுமே தேவையானால் சரிசெய்கிறார்கள் அல்லது மாற்றுகிறார்கள். போனின் 80% வரை அசல் பாகங்களை வைத்துக்கொண்டு, புதிய போன் போல் செயல்படச் செய்கிறார்கள்.
ControlZ நிறுவனம், ஸ்மார்ட்போன்களை புதிதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய போன்கள் தயாரிக்கப்படும்போது பெரும் அளவில் கார்பன் உமிழ்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் பழைய போன்களை சரிசெய்து மீண்டும் விற்பதால் அந்த பாதிப்பு குறைக்கப்படுகிறது.
தற்போது வரை ControlZ நிறுவனம் 60,000 ஸ்மார்ட்போன்களை Refresh செய்து விற்பனை செய்துள்ளது. இவை பெரும்பாலும் Apple மற்றும் OnePlus போன்ற பிரபல பிராண்டுகளின் உயர் தர மாடல்களாகும். புதிய மாடல்களை விட சுமார் 60% குறைந்த விலையில் இவை விற்கப்படுகின்றன.
வரும் காலங்களில் ஆண்டு 6,00,000 ஸ்மார்ட்போன்கள் Refresh செய்வதற்கான திட்டம் உள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்த ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சி பிரிவும் நிறுவப்படுகிறது. இதன் மூலம், ரூ.100 கோடி வருமான இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளதாம்.