உலகம் முழுவதும் தற்போது விர்ச்சுவல் ஹெட்செட் மிகப்பெரிய அளவில் பயனாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த விர்ச்சுவல் ஹெட்செட் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் புதிய விர்ச்சுவல் ஹெட்சட்டை அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்த ஹெட்செட் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த சாதனம் குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த ஹெட்செட் குறித்த சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள் என்று கூறப்படும் இந்த ஹெட்செட்டுகள் மதிப்புக்குரியது என்றும் ஆப்பிளின் இந்த தயாரிப்பு உண்மையில் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டுமே இந்த ஹெட்செட்டை அதிக யூனிட்டுகளுக்கு பொது மக்களுக்கு தர முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஹெட்செட்டுகள் மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றாலும் இந்த ஹெட்செட்டுகளின் விலை சுமார் ரூபாய் இரண்டரை லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இதை நினைத்து கூட பார்க்க முடியாது.
இதையும் படியுங்கள்: ஜியோ சினிமா கட்டணம் இனி ரூ.999.. இனிமேல் இலவசம் கிடையாதா?
ஆனால் இந்த தொகை கொடுத்து வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்காக இந்த ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை என்றும் உண்மையில் இந்த தயாரிப்புக்கு இணையாக சில தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கலாம் என்றும் ஆனால் இந்த தயாரிப்பு உலகில் இதுவரை இல்லாத ஆச்சரியங்களையும் அதிசயத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: இனி தியேட்டருக்கு போக வேண்டாம், மேட்ச் பார்க்க கிரௌண்டுக்கு போக வேண்டாம்.. வந்துவிட்டது ஜியோ தியேட்டர் VR ஹெட்செட்..!
தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் இந்த ஆப்பிள் விர்ச்சுவல் ஹெட்செட் எதிர்காலத்தில் விலை குறையலாம் என்றும் அப்போது ஏழை எளிய நடுத்தர மக்களும் இந்த வெப்சைட்டை வாங்க முன் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஜியோ விரிச்சுவல் ஹெட்செட்டுகள் வெறும் 1300 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் இரண்டரை லட்ச ரூபாய் என்பது மிக அதிகம் என்று பெயர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.