JioCinema: ஜியோ சினிமா கட்டணம் இனி ரூ.999.. இனிமேல் இலவசம் கிடையாதா?

By Bala Siva

Published:

ஜியோ சினிமாவில் தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த உடன் ஜியோ சினிமாவின் வருட சந்தா ரூபாய் 999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் கட்டணம் செலுத்தினால் பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. உள்ளூர் திரைப்படங்கள் முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் வரை இந்த ஓடிடியில் பார்க்கலாம்.

jio cinemaஇந்த நிலையில் உலககோப்பை கால்பந்து போட்டியை இலவசமாக ஒளிபரப்பி அனைவரையும் அசர வைத்த ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளையும் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது திடீரென ரூ.999 என்ற கட்டண விவரத்தை ஜியோ சினிமா அறிவித்துள்ளது

ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் ஒப்பந்தம் செய்து இருந்த HBO நிகழ்ச்சிகள் இனிமேல் ஜியோ சினிமாவில் தான் ஒளிபரப்பாகும். இதற்காக வார்னர் பிரதர்ஸ் குழுமத்துடன் ஜியோ சினிமா ஒப்பந்தத்தை போட்டுள்ள நிலையில் இனி ஜியோ சினிமாவில் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கலாம் என்பது குறிப்பிடப்பட்டது

ஒரே நேரத்தில் நான்கு டிவைஸ்களில் பார்க்கும் வகையில் ஜியோ சினிமாவின் இந்த கட்டண சலுகை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டும் இன்றி மாதாமாதம் பயன்படுத்தும் சந்தாத திட்டங்களையும் விரைவில் அறிவிக்க உள்ளது. எனவே இனிமேல் இலவசமாக ஜியோ சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Apple VR Headset: ஜியோவுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் ஹெட்செட்.. ஆனால் விலை ரூ.2.5 லட்சம்..!

ஏற்கனவே ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சில ஓடிடி நிறுவனங்கள் தங்களது சந்தாதாரர்களை இழந்து வரும் நிலையில் ஜியோ சினிமா அதிகப்படியான சந்தாதாரர்களை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...