அண்ணா அறிவாலயத்தில் ஓ.பன்னீர் செல்வம்!.. திமுகவில் இணைகிறாரா?..

அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.. அதன்பின் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் . அதன் பின் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு பாஜக மூலம் பல…

ops stalin

அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.. அதன்பின் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்
. அதன் பின் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு பாஜக மூலம் பல முயற்சிகள் எடுத்தார் ஓபிஎஸ்.

ஆனால் அவரை கட்சியை சேர்க்கு முடியாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருந்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி இடம் பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைய ஓபிஎஸ் பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கவில்லை..

இந்நிலையில்தான், ஓபிஎஸ் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ளவிருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருந்து திமுக அமைச்சர் சேகர் பாபுவுடன் இணைந்து ஒன்றாக ஒரே காரில் அண்ணா அறிவாலயம் சென்று கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.

விரைவிலர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவார் எனத்தெரிகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து விட்டு தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யவிருக்கிறார்.. அவரோடு அவரின் மகன் ரவிந்தரும் உடன் இருக்கிறார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ ஐயப்பன் எம்எல்ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ்-ஸுடன் திமுகவில் இணையவுள்ளார்.