Nothing Phone 2 ஸ்மார்ட்போன் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் பயனர்கள்..!

Published:

Nothing Phone 2 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போனின் விலை குறித்த தகவல் கசிந்து உள்ளதை அடுத்து அந்த தொகையை கேட்டு பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nothing Phone 1 சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் Nothing Phone 2 ஜூலை 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் இருந்த நிலையில் இந்த போனின் விலை சுமார் ரூ.76,500 இருக்கலாம் என்று கூறப்படுவது பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nothing Phone 2 ஸ்மார்ட்போன் என்பது ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC பிராஸசரில் இயங்கும் என்றும், 12ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சமாக 512ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் Nothing Phone 2 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ. 65,600 இருக்கலாம் என்றும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் சுமார் ரூ. 76,500 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.42,000 என விற்பனையாகி வரும் நிலையில் Nothing Phone 2 ஸ்மார்ட்போனின் விலை மிக அதிகம் என்றே கூறப்பட்டு வருகிறது.

Nothing Phone 2 ஜூலை 11 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இந்த போன் ஒரு விர்ச்சுவல் நிகழ்வில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனி வெளியீட்டு விழா இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

Nothing Phone 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...