ஜூலை 21ல் இந்தியாவில் அறிமுகமாகும் Nothing Ear 2 இயர்பட்ஸ் .. இவ்வளவு சிறப்பம்சங்களா?

Published:

மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் கிட்டதட்ட அனைத்துமே இயர்பட்ஸ் என்ற சாதனத்தை தயாரித்து வருகிறது என்பதும் அவை மிகப்பெரிய அளவில் தற்போது விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான நத்திங் நிறுவனம் தற்போது புதிய இயர்பட்ஸ் ஒன்றை தயாரித்து உள்ள நிலையில் இது இந்தியாவில் வரும் 21ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. ரூபாய் 9999 என்ற விலையில் அறிமுகமாகும் இந்த இயர்பட்ஸ் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

நத்திங் இயர் (2) இன் சில விவரக்குறிப்புகள் இதோ:

* 11.6மிமீ டைனமிக் டிரைவர்
* இரட்டை இணைப்பு உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் பயன்படுத்தலாம்
* இரைச்சலை தடுக்கும் சிறப்பம்சம்
* ஹை-ரெசிஸ்டண்ட் ஆடியோ சான்றிதழ்
* LHDC 5.0 தொழில்நுட்பம்
* 36 மணிநேர பேட்டரி ஆயுள்
* IPX4 வாட்டர் ரெசிஸ்டெண்ட்

நத்திங் இயர்பட்ஸ் 2 வெளிப்படையான வடிவமைப்பை கொண்டுள்ளதால் இதன் உள் செயல்பாடுகளைப் பார்க்க முடியும். மேலும் இந்த இயர்பட்கள் ANC அம்சத்தைக் கொண்டுள்ளதால் அவை பின்னணி இரைச்சலை 35dB வரை கட்டுப்படுத்தும்,

நத்திங் எக்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட செவிப்புலன் சுயவிவரத்துடன் இயர்பட்களை டியூன் செய்யலாம்.மேலும் இந்த இயர்பட்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும். மேலும் சார்ஜிங் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மேலும் உங்களுக்காக...