சீனாவை சேர்ந்த ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூக்கினுள் கரப்பான் பூச்சி சென்றதை எடுத்து அவரது அவருக்கு மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பிரச்சனையை கேள்விப்பட்டதில்லை, சிகிச்சையும் அளித்தது இல்லை என்று கூறியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த 28 வயது இளைஞர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது மூக்கில் கரப்பான் பூச்சி சென்றுவிட்டது. உடனே எழுந்து அவர் ஏதோ மூக்கினில் ஏதோ இருக்கிறது என்று அவர் யோசித்த நிலையில் அதன் பின்னர் அதை கவனிக்காமல் மீண்டும் தூங்கிவிட்டார். மூக்கினுள் சென்ற கரப்பான் பூச்சி தொண்டையில் உள்ள மூச்சுக்குழாயில் சிக்கி இருந்ததாக தெரிகிறது.
இதனால் தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது மூச்சுக்குழலில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சர்ஜரி செய்து கரப்பான் பூச்சியை வெளியே எடுத்த பின்னர் தான் தற்போது அவர் குணமாகி விட்டதாகவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் மூக்கினுள் கரப்பான் பூச்சி செல்லும் பிரச்சனையை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை, இப்படி ஒரு நோயாளிக்கு நாங்கள் சிகிச்சை அளித்ததும் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.