ரூ.2000க்குள் நோக்கியாவின் சூப்பர் மொபைல்.. 2 நாள் சார்ஜ் நிற்கும்..!

Published:

ஒவ்வொரு மாதமும் ஏராளமான மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் வெளியானாலும் பேசிக் ஃபோன்களுக்கு இன்னும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஸ்மார்ட் போனில் நடைபெறுவது போன்று எந்தவிதமான மோசடியும் பேசிக் போனில் நடைபெற முடியாது என்பதும் போன் பேசிக்கொள்வது மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்வது போன்ற ஒரு சில ஆப்ஷன்களை இதில் இருப்பதால் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு பல இந்த போனை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள இரண்டு பேசிக் போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 110 4G மற்றும் நோக்கியா 110 2G ஆகிய ஆகிய இரண்டு புதிய மாடல்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. நோக்கியா 110 4G மொபைல், 4ஜி எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது, அதேபோல் நோக்கியா 110 2ஜி மொபைலில் 2ஜி இணைப்பு மட்டுமே உள்ளது. அதாவது நோக்கியா 110 4G ஆனது வேகமான தரவு வேகத்தை அணுக முடியும்.

நோக்கியா 110 2G (1000mAh) ஐ விட நோக்கியா 110 4G பெரிய பேட்டரியையும் (1450mAh) கொண்டுள்ளது. அதாவது நோக்கியா 110 4G ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நிற்கும்.

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு தொலைபேசிகளும் 1.8 இன்ச் QVGA டிஸ்ப்ளே, பின்புற கேமரா, உள்ளமைக்கப்பட்ட FM ரேடியோ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆகியவற்றை கொண்டுள்ளன. இரண்டும் S30+ இயங்குதளத்தில் இயங்குகின்றன.

நோக்கியா 110 4G யின் விலை ரூ.2499 மற்றும் நோக்கியா 110 2Gயின் விலை ரூ.1699 என விற்பனை செய்யப்படுகிறது.

பாதுகாப்பான மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட ஃபோன் உங்களுக்குத் தேவைப்பட்டால், நோக்கியா 110 4G ஒரு நல்ல தேர்வாகும். நீங்கள் பட்ஜெட்டில் இருந்தால் மற்றும் 4G இணைப்பு தேவையில்லை என்றால், நோக்கியா 110 2G ஒரு நல்ல தேர்வாகும்.

மேலும் உங்களுக்காக...