நாளை மறுநாள் முதல் மாஸ்க் தேவையில்லை !! அரசு அதிரடி…

By Revathi

Published:

கொரோனா  என்னும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் பறித்தது. இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு  ஊரடங்கு தளர்வுகளைக் கொண்டு வந்தது.

இருப்பினும் இதனை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த சூழலில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று படிபடியாக குறைந்து கொண்டே வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளே முன் எடுக்கலாம் என சமீபத்தில் நடந்த ஒன்றிய அரசு சுகாதார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாநில அரசும்  பல  கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாளை மறுநாள் முதம் மாஸ்க் அணிய தேவையில்லை என்றும் அணைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனா தொற்று 183 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதியானதாகவும் , மருத்துவ மனைகளில் 902 கொரோனா நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment