இதெல்லாம் மத்திய பட்ஜெட்ல கவனிச்சீங்களா? வருமான வரி உச்சவரம்பு குறித்த முக்கிய அறிவிப்பு

By John A

Published:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பல எதிர்பார்ப்புகள் நிலவியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு மற்றும் எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி என்பது பற்றி விபரங்கள் கீழே..

  • தாமதமாக வருமான வரி செலுத்துவது இனி குற்றமாகக் கருதப்பட மாட்டாது.
  • மூன்றில் இருபங்கு தரப்பினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
  • புதிய நிலையான வருமான வரி முறையில் நிலையான கழிவு 50,000 முறையில் 75,000ஆக அதிகரிப்பு
  • புதிய வருமான வரி முறையில் 3 இலட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு இனி வரி கிடையாது
  • 3 லட்சம் முதல் 7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 5% வருமான வரி பிடித்தம்
  • 7 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் பெறுவோருக்கு  10% வருமானவரி விதிக்கப்பட்டுள்ளது.
  • 10 லட்சம் முதல் 12 லட்சம் வருமானத்திற்கு 15%, 12 லட்சத்திலிருந்து 15லட்சம் வருமானம் பெறுவோருக்கு 20% வருமான வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோறுக்கு 30% வருமான வரி விதிக்கப்பட உள்ளது.

பட்ஜெட்ல என்னென்ன இருக்கு? சமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா மத்திய பட்ஜெட்?

  • முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து
  • நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
  • புற்று நோய் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கம்
  • செல்போன், சார்ஜர் ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி 15 % குறைப்பு. இதனால் செல்போன் விலை குறைய வாய்ப்பு
  • நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் 32.07 இலட்சம் கோடியாக இருக்கும் எனக் கணிப்பு

பட்ஜெட்ல இவ்வளவு சிறப்பம்சங்களா? அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிவீசிய நிதியமைச்சர்.. ஆந்திரா பீகாருக்கு அடித்த லக்..

  • தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான சுங்கவரி 6%ஆகக் குறைப்பு. இதனால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை குறைய வாய்ப்பு
  • சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் மீதான சுங்க வரி 25% அதிகரிப்பு
  • அறக்கட்டளைகள், தொண்டுநிறுவனங்களுக்கு இதுவரை இருந்த 2 வரி முறைகள் இனி ஒரே வரி முறையாக மாற்றம்