ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலாக, “கண்டிப்பாக வாய்ப்பு உண்டு” என்பது என்று தான் கூறப்பட்டு வருகிறது. பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்பதால் இதில் லாபம் அடைவதற்கு எந்த அளவுக்கு சாத்தியமோ, அதே அளவு நஷ்டம் அடைவதற்கும் சாத்தியம் உண்டு.
எஸ்ஐபி முறையில் செலுத்தப்படும் பணம் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை ஆகியவற்றில் தான் முதலீடு செய்யப்படும். பங்குச்சந்தை இறங்கினால், கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. மேலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த தொகை நஷ்டம் அடைந்தால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது. முழு பொறுப்பும் முதலீடு செய்பவர்களுக்கு தான் வந்து சேரும். முதலீடு செய்பவர்கள் லாபத்தையும், அதே போல் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் குறுகிய காலத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த நஷ்டம் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், நீண்ட காலத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை நஷ்டம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, எஸ்ஐபி முறையில் அல்லது லம்ப்சம் முறையில் முதலீடு செய்து, ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
குறைந்தது 10 வருடங்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால், நஷ்டம் வர வாய்ப்பே இல்லை என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.