எல்லா புகழும் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கே.. சிக்கலில் வங்கி நிர்வாகம்..!

Published:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கையில் இருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் பிக்சட் டெபாசிட் தான். குறைந்த வட்டி கிடைத்தாலும் பரவாயில்லை, நம்முடைய அசலுக்கு மோசம் இல்லை என்ற எண்ணத்தில் தான் அனைவரும் அன்றைய காலத்தில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தனர். ஒரு சிலர் நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர்.

பிக்சட் டெபாசிட்டில் அதிக பணம் வந்ததால் வங்கிகள் லாபகரமாக இயங்கியது என்பதும் அந்த பணத்தை வைத்து பல லோன்களை கொடுத்து லாபத்தை வங்கிகள் சம்பாதித்தது. ஆனால் தற்காலத்தில் மக்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை என பரவலாக முதலீடு செய்வதால் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு யாரும் முன் வரவில்லை.

பிக்சட் டெபாசிட்டில் அதிகபட்சமாக 7% மட்டுமே வருமானம் கிடைக்கிறது என்பதாலும் மியூச்சுவல் பண்டில் குறைந்தது 12 சதவீதம் வருமானம் கிடைக்கிறது என்பதாலும் பிக்சட் டெபாசிட்டை விட மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்தது என்ற விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து மியூச்சுவல் ஃபண்டிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வருகின்றனர். அதில் ஓரளவு நல்ல லாபமும் பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது வங்கிகளில் டெபாசிட் குறைந்து உள்ளதால் வங்கிகளை நடத்தவே சிரமப்படுகின்றன. வங்கிகள் ஏராளமான கடன்களை கொடுத்த நிலையில் தற்போது டெபாசிட்டுகள் குறைந்துள்ளதால் வங்கிகள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சில வங்கிகள் அதிக சதவீதம் வட்டி தருவதாக பிக்சட் டெபாசிட் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்த அறிவிப்புகள் என்ன இதோ:

ஆர்.பி.எல் பேங்க்: 8.1% (சீனியர் சிட்டிசன்களுக்கு 8.6%)

பந்தன் பேங்க்: 8%

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி: 7.5% (சீனியர் சிட்டிசன்களுக்கு 8%)

ஃபெடரல் பேங்க்: 7.35% (சீனியர் சிட்டிசன்களுக்கு 7.4%)

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: (7.25%).

மேற்கண்ட வட்டி விகிதத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...