இந்தக் கடலுக்கு அடியில் செல்லும் ரயில், 600 முதல் 1000 கிமீ/மணி நேரம் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் மும்பை – துபாய் பயண நேரம் வெறும் 2 மணிநேரத்திற்கு குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
கடலுக்குள் மிகுந்த வேகத்தில் பயணிக்கும் போது, பயணிகள் பார்ப்பதற்கே ஆச்சரியமூட்டும் ஒரு விசித்திரமான காட்சியை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். இது ஒரு மாயாஜால அனுபவமாக இருக்கும்.
இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி செலவாகும் என்றும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட உடன், இந்தியா – துபாய் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் மேம்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த ரயில் இணைப்பு பயணிகள் வசதிக்கு மட்டுமல்ல, துபாயில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வேகமாக மற்றும் திறமையான முறையில் பரிமாற்றம் செய்ய உதவும். நிபுணர்களின் கருத்துக்களின்படி இந்த ரயில் திட்டம் 2030க்குள் நிறைவு செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை UAE-யின் National Advisor Bureau Limited நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இதன் நோக்கம், காலாண்டு போக்குவரத்து முறையை மாற்றுவதுடன் விமான பயணத்திற்கு ஒரு மாற்று வழங்குவதும் ஆகும்.
இந்த திட்டம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றும், இரு நாடுகளின் அங்கீகாரம் கிடைத்தால் 2030க்குள் நிறைவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இது வெறும் கனவா? இல்லை, நிஜமாகுமா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பார்க்க காத்திருப்போம்.