ரூ.1.27 கோடிக்கு சொத்தை விற்ற மும்பை நபர்.. சிறிது நேரத்தில் மொத்த பணமும் மோசடி..!

Published:

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது சொத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் சில மணி நேரத்தில் அந்த மொத்த பணமும் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை சேர்ந்த நபர் ஒருவர் தனது பூர்வீக சொத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை அவர் நல்ல விதத்தில் முதலீடு செய்த காத்திருந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு பெண் அழைப்பு விடுத்தார். அந்த பெண் சிறிய வேலைகளை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டினார்

ஒரு திரைப்படத்தையே அல்லது ஒரு ஹோட்டலையோ மதிப்பிட வேண்டும் என்றும் அதற்கு அதிக பணம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து அவர் உதாரணமாக ஒரு ஹோட்டலை மதிப்பீடு செய்ததற்கு அவருக்கு 7000 ரூபாய் பணம் கிடைத்தது. இதனால் அந்நிறுவனம் நம்பத்தகுந்த நிறுவனம் என்று உறுதி செய்த அவர் அடுத்தடுத்து சில வேலைகளை செய்தார். சில மணி நேரத்தில் அவர் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பாதித்த நிலையில் அவர் அவருக்கு அந்த பெண் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினார்.

இதனை அடுத்து சொத்தை விற்று வைத்திருந்த ரூ.1.2 கோடியை படிப்படியாக சில மணி நேர இடைவெளியில் முதலீடு செய்த நிலையில் மொத்த பணமும் ஒரு கட்டத்தில் தான் இழந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் தாமதமாக செய்யாமல் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அந்த பணம் மேற்கு வங்கத்தில் உள்ள 8 வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த வங்கிக்கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்ததால் அவரது பணம் தப்பித்தது. இருப்பினும் மோசடி செய்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...