தவெகதான் எங்களை கூப்பிட்டாங்க!.. போட்டு உடைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 08 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது. ஒருபக்கம் அதிமுகவிலிருந்து இதுவரை…

vijaya baskar

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 08 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது.

ஒருபக்கம் அதிமுகவிலிருந்து இதுவரை 6 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர். ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் தவெகவில் இணைந்த நிலையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைந்தனர். முதல்வர் விஜய் கரூருக்கு சென்றிருந்த போதும் அந்த மேடையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசினார்..

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர். விஜய பாஸ்கர் ‘அதிமுக தலைமையிடம் நாங்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.. அந்த நேரத்தில் தவெகவிலிருந்து எங்களை தொடர்பு கொண்டார்கள்.. எனவே தவெகவில் இணைந்து விட்டோம்’ என சொல்லியிருக்கிறார். இதையடுத்து ‘தவெகவிலிருந்துதான் எங்களை கூப்பிட்டார்கள் என இவரே சொல்லிவிட்டார். இதற்கு பெயர் குதிரை பெறும்தானே’ என அதிமுகவினரும், திமுகவினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.