நாயை கவ்விய சிறுத்தை.. சிறுத்தையிடம் இருந்து தப்பி பதட்டமின்றி குட்டிகளுக்கு பால் கொடுத்த தாய் நாய்..!

  மும்பையில், ஒரு பெண் நாயை சிறுத்தை கவ்வி கொண்டு சென்ற நிலையில், ஆவேசமாக அந்த சிறுத்தையிடம் இருந்து தப்பிய நாய், அதன் பின்னர் எந்த விதமான பதட்டமும் இன்றி தனது குட்டிகளுக்கு பால்…

dog

 

மும்பையில், ஒரு பெண் நாயை சிறுத்தை கவ்வி கொண்டு சென்ற நிலையில், ஆவேசமாக அந்த சிறுத்தையிடம் இருந்து தப்பிய நாய், அதன் பின்னர் எந்த விதமான பதட்டமும் இன்றி தனது குட்டிகளுக்கு பால் கொடுத்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் நாய் தனது குட்டிகளுடன் இருந்தபோது, திடீரென அங்கு வந்த சிறுத்தை தாய் நாயை கவ்வி கொண்டு சென்றது. ஆனால், தனது குட்டிகளுக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த நாயிடம் இருந்ததால், சிறுத்தையிடம் இருந்து ஆவேசமாக போராடி தப்பியது.

இதனையடுத்து, கழுத்திலும் வயிற்றிலும் பயங்கரமான காயம் ஏற்பட்டபோதிலும், எந்த பதட்டமும் இன்றி உடனே தனது குட்டிகள் அருகில் வந்து பால் ஊட்டியது. இந்த சிசிடிவி வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த தாய் நாயின் வீரத்தை மெச்சி, அந்த பகுதியில் உள்ளவர்கள் அதை “சக்தி” எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், அந்த நாய்க்கு தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில், மும்பையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தாய் நாய் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாகவும், தனது குட்டிகளுடன் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தாய் நாய் தனது குட்டிகளை காப்பாற்றுவதற்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கும் என்பதைக் காட்டும் ஒரு நிஜ உதாரணம் இந்த சிசிடிவி வீடியோவாகியுள்ளது என பலரும் கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

 

https://www.instagram.com/p/DH_P1W2NLGt/