மாதம் 133 ரூபாய் தான்.. 300 சேனல்கள்.. 20 ஓடிடி சந்தாக்கள்.. கேபிள் டிவி சந்தை அதிர்ச்சி..!

  தொலைக்காட்சிகளை பார்ப்பவர்கள் பொதுவாக கேபிள் டிவி மற்றும் டிடிஎச் பாக்ஸ் வைத்திருக்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது, இன்டர்நெட் மூலம் ஸ்மார்ட்  டிவிகளில் இணைத்து நிகழ்ச்சிகளை பார்க்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை…

 

தொலைக்காட்சிகளை பார்ப்பவர்கள் பொதுவாக கேபிள் டிவி மற்றும் டிடிஎச் பாக்ஸ் வைத்திருக்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது, இன்டர்நெட் மூலம் ஸ்மார்ட்  டிவிகளில் இணைத்து நிகழ்ச்சிகளை பார்க்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்த துறையில் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில், திடீரென “டோர் பிளே” என்ற நிறுவனம் இந்த துறையில் நுழைந்துள்ளது. இந்த நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ₹399 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மாதத்திற்கு ₹133 மட்டுமே செலுத்தி, 300 லைவ் டிவி சேனல்களையும் 20க்கும் மேற்பட்ட ஓடிடி சேனல்களையும் பார்க்கலாம்.

ஆனால், இந்த சேவை தற்போது செல்போனில் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ், சன் நெக்ஸ்ட் உட்பட பல முன்னணி டிவி சேனல்களும் இந்த திட்டத்தில் உள்ளன.

இப்போதைக்கு செல்போனில் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என்றாலும், விரைவில் அதை மாற்றி, டிவி உள்ளிட்ட மற்ற சாதனங்களில் கூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனால், முன்னணி நிறுவனங்கள், குறிப்பாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவை அதிர்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.