டிரம்ப் திட்டத்தை தவிடுபொடியாக்கிய மோடி.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேசிய மோடி.. கைநழுவிப்போன நோபல் பரிசு.. கடும் ஆத்திரத்தில் டிரம்ப்?

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலில் உக்ரைன் மோதல் மற்றும் இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும்…

india ukraine russia

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலில் உக்ரைன் மோதல் மற்றும் இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த உரையாடலின்போது, உக்ரைன் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை புடின், மோடியிடம் விளக்கியதாகவும், அதற்கு மோடி, மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான தீர்வு அவசியம் என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய மோடி, உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதியான தீர்வை கண்டறிவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இந்த நிலைப்பாடு, சர்வதேச மோதல்களை தவிர்க்க இந்தியா எடுக்கும் முயற்சி உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல்

உக்ரைன் மோதலுக்கு அப்பால், மோடி, புதின் ஆகிய இரு தலைவர்களும் தங்கள் இருதரப்பு நட்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவில் திருப்தியை வெளிப்படுத்தினர். பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த அவர்கள் உறுதி பூண்டனர்.

இந்த உரையாடலின் இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், இந்த ஆண்டின் இறுதியில் 23-வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க புதினை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததுதான். இந்த உச்சி மாநாடு, இரு தலைவர்களும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை வகுக்கவும் ஒரு தளமாக அமையும்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இருதரப்பு வர்த்தகம் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டுக்குள் $100 பில்லியன் வர்த்தக இலக்கை அடைய முயல்கின்றன. இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு தேசிய நாணயங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இது அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதைக் குறைத்து, தங்கள் வர்த்தகத்தை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து காக்க உதவும்.

பாதுகாப்பை பொறுத்தவரை, இந்தியா மற்றும் ரஷ்யா நீண்டகால கூட்டாண்மையை கொண்டுள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் பாகங்களை இந்தியாவில் இணைந்து தயாரிப்பதை அதிகரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா, ரஷ்யாவின் நட்பு மேலும் வலுப்படுதல், ரஷ்யா – உக்ரைன் போரை இந்தியா நிறுத்த செய்த முயற்சி ஆகியவை டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், வழக்கமாக எல்லா போரையும் நான் தான் நிறுத்தினேன் என்று கூறும் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரையும் நான் தான் நிறுத்தினேன் என கூற திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டத்தை கலைத்த மோடி மீது டிரம்ப் இன்னும் கோபம் அதிகப்பட வாய்ப்பு உள்ளதாக கூரப்படுகிறது.