துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!

  பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…

modi1

 

பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த ’YUGM Conclave’ நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது: ’வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் அடைய திட்டமிட்டுள்ளோம். காலம் குறைவாக உள்ளது. இலக்குகள் பெரிதாக உள்ளன. நான் இந்தச் செய்தியை தற்போதைய சூழ்நிலைக்கு கூறவில்லை.’ என்று கூறினாலும் அவர் கூறியதை பலர் பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவே புரிந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற ’மன் கி பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் 121வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகளுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் மிக கடுமையான தண்டனை வழங்குவோம் என உறுதி தெரிவித்தார்.

’இது நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு  முயற்சி. பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களும், செயல்படுத்தியவர்களும் மிகக் கடுமையான எதிர்வினையை எதிர்நோக்க வேண்டி இருக்கும்,’ என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகளும், திட்டமிடுபவர்களும் தங்கள் கணக்கில் இல்லாத அளவுக்கான தண்டனையை எதிர்நோக்க நேரிடும். இன்று பீகாரின் மண்ணிலிருந்து, உலகுக்கு முழுமையாக தெரிவிக்கிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் அடையாளம் காணும், தேடும், தண்டிக்கும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை துரத்துவோம். இந்தியாவின் மனநிலையை பயங்கரவாதத்தால் முறியடிக்க முடியாது,’ என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது உரையின் முக்கியமான பகுதியை ஆங்கிலத்தில் பேசினார். இது அவர் உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை தெளிவாகக் காட்ட விரும்பியதாக கருதப்படுகிறது.