மைக்ரோசாப்ட், தனது பிரபலமான Copilot AI டெக்னாலஜியை தங்களுடைய பயனர்களுக்கு வழங்கி வந்த நிலையில் தற்போது MacOS பயன்பாட்டையும் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இந்த வசதி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவில் மட்டும் கிடைத்தாலும் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கிடைக்கும்.
MacOS-ல் Copilot பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்
மெனுபார் ஐகான் மற்றும் டெஸ்க்டாப் ப்ராம்ப்ட் பார் கொண்டுள்ளதால் விரைவாக அணுக முடியும்
‘Option + Space bar’ அழுத்தி Copilot-ஐ ஷார்ட் கட் வழியில் ஓப்பன் செய்யலாம்.
கேள்விகள் குரல் வழியாக கேட்கலாம் அல்லது டைப் செய்தும் கேள்விகள் கேட்கலாம்
இதை பயன்படுத்த Apple ID இருந்தால் போதும், Microsoft கணக்கு வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இந்த வசதியை பயன்படுத்த உங்கள் MacOS 14.0 (Mojave) அல்லது அதற்குப் பிந்திய பதிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
Apple Silicon MacBook-களில் மட்டுமே செயல்படும்.
Intel Mac பயனர்கள் இதைப் பயன்படுத்த முடியாது.
எப்படி டவுன்லோட் செய்வது?
மைக்ரோசாப்ட் Copilot இணையதளத்திற்கு சென்று, MacOS பதிப்பிற்கான டவுன்லோட் இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்து அதன்பின் Apple ID மூலம் லாகின் செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் Copilot பயன்பாடு Mac பயனர்களுக்கு விரைவாகவும் எளிமையாகவும் AI சேவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.