இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறை கேமிங் துறையாகும். ஆன்லைன் மூலம் புதுவிதமான கேம்களை விளையாடுவதில் இளம் வயதினர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், இந்த துறையில் பணிபுரியும் பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், கேமிங் துறையில் பெண்களின் பங்களிப்பு 12% முதல் 14% மட்டுமே உள்ளதாகவும், உலகளவில் 22% முதல் 24% மட்டுமே இருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 85% பேர் ஆண்கள் தான் இந்த துறையில் பணியாற்றுகின்றனர். அதேபோல், உலகளவிலும் 75% ஆண்களே கேமிங் துறையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
பெண்கள், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் தங்களை முன்னிறுத்திக் கொண்டு வருவதால், கேமிங் துறையிலும் அவர்கள் இன்னும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று இந்த துறையில் உள்ள வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையைப் பொருத்தவரை குறைவான அளவில் பெண்கள் கேமிங் துறையில் இருந்தாலும், வருங்காலத்தில் அதிகமான பெண்கள் இதில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.