ஒரே ஒரு மாணவனை கல்லூரியில் சேர்க்க 170 கல்லூரிகள் போட்டா போட்டி.. ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப் தரவும் முடிவு…!

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது மாணவனை தங்கள் கல்லூரியில் சேர்க்க 170 கல்லூரிகள் போட்டோ போட்டி போட்டு வருவதாகவும் ரூபாய் 74 கோடி வரை அவருக்கு ஸ்காலர்ஷிப் பணம் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்…

student

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது மாணவனை தங்கள் கல்லூரியில் சேர்க்க 170 கல்லூரிகள் போட்டோ போட்டி போட்டு வருவதாகவும் ரூபாய் 74 கோடி வரை அவருக்கு ஸ்காலர்ஷிப் பணம் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கின்னஸ் ரெக்கார்டில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள லூசியானா உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் டென்னிஸ். இவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேர்வதற்காக பல கல்லூரிகளில் விண்ணப்பம் செய்தார். அவர் மொத்தம் 200 கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த பணியை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டென்னிஸ் மதிப்பெண்கள் மற்றும் அறிவாற்றலை பார்த்து அவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க 170 கல்லூரிகள் முன்வந்துள்ளதாகவும் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் அனுப்பி உள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கல்லூரியும் டென்னிஸ் தங்கள் கல்லூரிகள் படித்தால் ஸ்காலர்ஷித் தருவதாக லட்சக்கணக்கில் கூறியுள்ளது. அதன் ஒட்டுமொத்த தொகை 74 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த 170 கல்லூரிகளில் எந்த கல்லூரியில் தேர்வு செய்யவது என்ற குழப்பத்தில் டென்னிஸ் இருப்பதாகவும் விரைவில் அவர் முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் படித்த பள்ளி நிர்வாகி பேட்டையளித்த போது ’இந்த செய்தியை கேட்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் எங்கள் பள்ளியின் தரம் குறித்து அனைத்து மக்களும் குறைக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் டென்னிஸ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உள்ளதால் அவர் எந்த கல்லூரியில் சேர இருக்கிறார் என்பதை அறிய நானும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்

மேலும் டென்னிஸின் இந்த சாதனையை பள்ளி நிர்வாகிகள் கின்னஸ் உலக சாதனை புத்தக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாகவும் விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. உலகிலேயே ஒரே ஒரு மாணவனை தங்கள் கல்லூரியில் சேர்க்க சேர 170 கல்லூரிகள் ஒப்புக் கொண்டுள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.