தியேட்டரில் படம் பார்த்து கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த நபர்.. வைரல் வீடியோ..!

Published:

தியேட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டு லேப்டாப்பில் தனது அலுவலகத்திற்காக வேலை பார்த்த நபர் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து பணி செய்வதால் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் இருந்தது என்பதும் போக்குவரத்து மற்றும் செலவு ஆகியவை மிச்சப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி குடும்பத்தில் உள்ளவர்களுடன் அதிக நேரம் செலவு செய்யும் வாய்ப்பு இருந்தது என்பதும் இதனால் குடும்பத்தில் ஒரு பந்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனவே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னரும் பலர் வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை தேர்வு செய்தார்கள் என்பதும் அலுவலகம் வரச்சொன்னால் கூட அவர்கள் வர மறுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்வதில் சில அசெளகரியங்கள் இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக வீட்டில் இருந்து பணி செய்பவர்கள் ஒரு நிறுவனத்தை தவிர வேறு நிறுவனங்களுக்கும் பணி செய்வதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் வீட்டிலிருந்து பணிசெய்யும் பணியாளர் ஒருவர் பெங்களூரில் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு தனது அலுவலகத்திற்காக வேலை பார்க்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீட்டில் இருந்து பணி செய்தால் இப்படி கூட ஒரு சலுகை இருக்கிறது என்றும் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டே வேலை பார்க்கலாம் என்று பலர் காமெடியாக கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

 

https://www.instagram.com/p/Cq3G1xWAMsM/

மேலும் உங்களுக்காக...