அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!

Published:

உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் நோக்கம் தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது என்பதும் அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து விட்ட நிலையில் அண்டை நாடுகளான பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சமீபத்தில் பைக் சுற்றுப்பயணம் செய்தார் என்பதை பார்த்தோம். ஏற்கனவே ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு அவர் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்ட பின்னர் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் பைக் சுற்று பயணம் செய்யப் போவதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித்தை போலவே அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். 53 நாட்கள் அவர் கார் மூலம் அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியாவுக்கு பயணம் செய்து உள்ளார். 53 வயதாக இருந்தாலும் அவர் இளைஞரை போல மிகுந்த உற்சாகத்துடன் காரில் பயணம் செய்ததாகவும் இந்தியாவுக்கு காரில் பயணம் செய்ததை தன்னால் மறக்க முடியாது என்றும் தனது சாகச பயணத்தில் 2200 km பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

america to india1

வெறும் தரை மார்க்கமாக அவர் பயணம் செய்துள்ளதாகவும் 53 நாட்களில் 23 நாடுகள் கடந்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த துணிச்சலான முடிவை எதிர்கொள்ள தனது நண்பர்கள்தான் உறுதுணையாக இருந்தார்கள் என்றும் 23 நாடுகளை கடக்கும்போது பல்வேறு சவால்களை தான் சந்தித்ததாகவும் இருப்பினும் தனது தேடலை கைவிடாமல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் தனது பயணத்திற்கு நிதி அளித்த  எந்த ஸ்பான்சர்ஷிப்பை யும் அவர் அணுகவில்லை  என்றும் தனது சொந்த சம்பாத்தியத்தில் இருந்த பணத்தை தான் பயன்படுத்தியதாகவும் இந்த பயணத்திற்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பயணம் செய்ய செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் சாலை வழி இல்லை என்பதால்  தனது காரை இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கே இருந்து சாலை பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். தனது காரை லண்டனில் இருந்து அவர் கிளப்பி ஐரோப்பிய நாடுகளில் தனது பயணத்தை தொடர்ந்து இறுதியாக அவர் இந்தியா வந்து சேர்ந்து உள்ளார். பல்வேறு நாடுகளில் பயணம் செய்த போது வேக கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் அதற்காக பலமுறை அபராதம் செலுத்தி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக நான்கு நாடுகளில் அவர் அபராதம் செலுத்தியதாகவும் செர்பியா, துருக்கி, பாகிஸ்தானில் தான் அதிக அபராதம் செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் தனது முழு பயணம் குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதற்காக மூன்று வருடங்கள் திட்டமிட்டதாகவும் தன்னோடு தனது மகனையும் இந்த பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...