டெல்லி அருகே ஆக்ராவில் உள்ள டிசிஎஸ் ஊழியர் மனோ சர்மா என்பவர், கடந்த மாதம் 24ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆண்களை பற்றியும் தயவுசெய்து சிந்திக்கவும் பேசவும்” என்று தெரிவித்துள்ளார். “பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுவது போலவே, ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. போலீசார் மற்றும் சட்ட அமைப்புகள் ஆண்களுக்கு சாதகமாக இல்லை. இது தொடர்ந்து கொண்டே இருந்தால், ஒருநாள் உலகத்தில் ஆண்களே இருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
தனது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததாகவும், இதனால் தான் மனது உடைந்து போனதாகவும், தன்னை தனது மனைவி டார்ச்சர் செய்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். “இந்த சமூகத்தில் ஆண்களும் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள், பேசுங்கள். அவர்கள் தனிமையில் தவிக்கிறார்கள்” என்றும் அவர் கூறி, அதன் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து, மனோ சர்மாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. “பெண்களைப் போலவே, ஆண்களுக்கும் பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு தேவை” என்று அவர் கூறியிருப்பது, தற்போது உள்ள ஆண்கள் பாதுகாப்பின்மையையும் குறிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.