நீங்கள் மெயில் அனுப்பும் போது உங்கள் இமெயில் ஐடியை மறைக்க வேண்டுமா? கூகுளின் புதிய வசதி..!

  இமெயில் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. நாம் அனுப்பும் ஒவ்வொரு இமெயிலிலும் நம்முடைய இமெயில் முகவரி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில், இவ்வாறு அனுப்பப்படும் இமெயில்களில் உள்ள நம்முடைய முகவரியை…

gmail

 

இமெயில் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. நாம் அனுப்பும் ஒவ்வொரு இமெயிலிலும் நம்முடைய இமெயில் முகவரி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில், இவ்வாறு அனுப்பப்படும் இமெயில்களில் உள்ள நம்முடைய முகவரியை சேமித்து, விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதனால், நமக்கு தேவையில்லாத பல இமெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான மாற்று ஏற்பாட்டை தற்போது கூகுள் செய்துள்ளது. கூகுளின் ஜிமெயில் பயனாளர்கள் இனிமேல் ஈமெயில் அனுப்பும் போது, அவர்களுடைய இமெயில் முகவரியை தெரியாமல் மறைக்கும் வகையில் அனுப்பலாம். இதற்காக “கூகுள் சீல்டு இமெயில்” என்ற புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் நம்முடைய உண்மையான மின்னஞ்சல் முகவரியை வெளிப்படுத்தாமல், தற்காலிக மாற்று முகவரியை வழங்கும். அந்த மாற்று முகவரி மட்டுமே நீங்கள் யாருக்கு ஈமெயில் அனுப்பினீர்களோ அவர்களுக்கு தெரியும். அதேபோல், உங்களுக்கு வரும் இமெயில்களும் அந்த மாற்று முகவரியிலிருந்து வரும்.

உங்களுடைய உண்மையான இமெயில் முகவரியை, ஜிமெயில் நிறுவனம் தானாகவே மாற்றி அனுப்பும். இதன் மூலம், உங்கள் உண்மையான இமெயில் முகவரி யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும். இதனால், விளம்பர நிறுவனங்களின் ஸ்பாம் இமெயில்கள் குறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய அம்சத்தால் ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பு மேம்படுவதோடு, அதை எளிமையாக பயன்படுத்தவும் செய்யும். இந்த வசதி, ஜிமெயில் பயனாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.