ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய மேக்புக் ஏர் லேப்டாப்.. விலை என்ன தெரியுமா?

Published:

ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதும் அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் 15 இன்ச் MacBook Air என்ற லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கும் நிலையில் இந்த லேப்டாப் நிச்சயம் பயனர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் டிஸ்ப்ளே உள்ள லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள், விலை மற்றும் சில விவரங்களை தற்போது பார்ப்போம்.

MacBook Air என்பது 15.3-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே கொண்டது. மேலும் M2 சிப், 18 மணிநேர பேட்டரி அம்சங்களையும் கொண்டது. இதன் விலை விலை $1,299 ஆகும்.

15.3-இன்ச் டிஸ்ப்ளே 2560×1664 பிக்சல்கள் ரெசலூசன், 1080p FaceTime HD கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. M2 சிப் என்பது Mac ஓஎஸ்க்காக ஆப்பிளின் தனிப்பயன்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிலிக்கானின் இரண்டாம் தலைமுறை அம்சம் ஆகும். இது 8-கோர் CPU, 10-core GPU மற்றும் 16-core நியூரல் எஞ்சின் ஆகியவற்றை கொண்டுள்ளது. 13-இன்ச் MacBook Air சாதனத்தில் உள்ள M1 சிப்பை விட M2 சிப் 40% வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த MacBook Air ல்கேப்டாப் MagSafe சார்ஜிங் போர்ட், 1080p FaceTime HD கேமரா மற்றும் ஆறு ஸ்பீக்கர் ஒலி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

MacBook Air லேப்டாப்பை இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்பவர்களுக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும்.

MacBook Air லேப்டாப்பின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* 15.3 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே
* எம்2 சிப்
* 18 மணிநேர பேட்டரி ஆயுள்
* MagSafe சார்ஜிங் போர்ட்
* 1080p ஃபேஸ்டைம் HD கேமரா
* 6 ஸ்பீக்கர் ஒலி அமைப்பு
* நான்கு வண்ணங்கள்

MacBook Air லேப்டாப் முந்தைய தலைமுறையை விட மேம்படுத்தப்பட்ட சாதனம் என கூறப்படுகிறது. பெரிய டிஸ்ப்ளே, அதிக சக்திவாய்ந்த சிப், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நவீன வடிவமைப்பு இருப்பதால், சக்திவாய்ந்த மற்றும் கையடக்க லேப்டாப் தேவைப்படுவோர்களுக்கு இது ஒரு சிறந்த சாதனம் ஆகும்.

மேலும் உங்களுக்காக...