காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் வழிப்பறி.. தஞ்சை அருகே நூதனமான டிஜிட்டல் திருட்டு..!

By Bala Siva

Published:

ஒருவரிடம் காசு பணம் இருந்தால் அதை வழிப்பறி செய்து திருடுவது என்பது பழங்கதை ஆகிவிட்ட நிலையில் தற்போதைய டிஜிட்டல் உலகில் ஜிபே மூலம் மிரட்டி பணம் திருடப்படும் சம்பவம் தஞ்சை அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை சேர்ந்த தமிழரசன் என்ற 24 வயது இளைஞர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதலிக்கு உடல்நலக்குறைவு என்ற கேள்விப்பட்ட தமிழரசன் அவரை அவரது சொந்த ஊரில் கொண்டு போய் விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இளம்பெண் தனக்கு வாந்தி வருவதாக கூறியதால் பைக்கை நிறுத்திய நிலையில் அந்த வழியாக வந்த ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல் தமிழரசனையும் இளம் பெண்ணையும் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு பணத்தை டிஜிட்டல் மூலம் திருட முடிவு செய்தனர்.

உங்கள் வீட்டில் இருந்து ஜிபி மூலம் பணத்தை அனுப்ப சொல்லுங்கள் என்று மிரட்டி பணம் கொடுத்தால் தான் இந்த இடத்தில் இருந்து செல்ல முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து இளம் பெண்  தனது சகோதரிக்கு போன் செய்து தமிழரசன் நம்பருக்கு ஜிபே அனுப்ப சொல்லியுள்ளார். அவரும் பணம் அனுப்பிய நிலையில் அந்த பணத்தை தங்களுடைய வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் கும்பல் பெற்றுள்ளனர்.

இந்த டிஜிட்டல் திருட்டு குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். பணம் பெற்றுக்கொண்ட கும்பலின் செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார் ஒரு சில நிமிடங்களில்   கும்பலில் நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: digital, gpay, thefty