சமூக வலைதளங்களில் ஒன்றான லிங்க்ட்-இன் இந்திய பயனாளர்கள் 100 மில்லியன் பேர் இருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு தற்போது ஒரு புதிய வசதியை உருவாக்கி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பேஸ்புக் டுவிட்டர் போன்ற பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்குவது அதிகரித்துள்ள நிலையில் தற்போது லிங்க்ட்-இன் சமூக வலைதளத்திலும் சில போலிக் கணக்குகள் உலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லிங்க்ட்-இன் சமூகவலைதளத்தில் இந்தியாவில் உள்ள 100 மில்லியன் பயனர்களுக்கு புதிய வசதியாக அடையாள சரிபார்ப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஆதார் மற்றும் போன் எண்ணை கொண்டு இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை உறுதி செய்யக் கொள்ளலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்
1. உங்கள் லிங்க்ட்-இன் பக்கத்திற்கு சென்று புரபொல் பிரிவில் கிளிக் செய்யவும்.
2. “சரிபார்ப்பு” பிரிவின் கீழ், “ஆதார் எண் கொண்டு சரிபார்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும்
4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை பதிவுச் எய்யவும்.
உங்கள் அடையாளம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் புரபொலில் உங்கள் பெயருக்கு அடுத்ததாக ஒரு நீல நிற சரிபார்ப்பு குறி தோன்றும். இதனையடுத்து உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டது என்பது பொருள்.
லிங்க்ட்-இன் சமூக வலைத்தளத்தில் நீல டிக் பெறுவதால் கிடைக்கும் சில நன்மைகள் இதோ:
* சரிபார்க்கப்பட்டு நீல டிக் பெற்றுவிட்டால் உங்கள் கணக்கு உண்மையானது என்பது உறுதி செய்யப்படுகிறது. உஙகள் நண்பர்கள், ஃபாலோயர்கள் உங்களுடன் இணைவதற்கு தயக்கம் இருக்காது.
* நீல டிக் பயனர்களுக்கு உங்கள் சுயவிவரத்தை யார் பார்த்தார்கள் என்பதைப் பார்க்கும் அம்சம் கிடைக்கும்.
* நீல டிக் பெறுவதன் மூலம், மோசடி மற்றும் அடையாளத் திருட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவலாம். உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண் போன்ற பிற தனிப்பட்ட தகவல்களை லிங்க்ட்-இன் யாரிடமும் பகிராது.