பொதுவாக இன்சூரன்ஸ் பாலிசி எல்லாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தான் சாதகமாக இருக்கும் என்றும் பாலிசிதாரர்களுக்கு மிகவும் குறைந்த அளவே லாபகரமாக இருக்கும் என்றும் சில பாலிசிகள் பாலிசிதாரர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே தான் பொருளாதார வல்லுநர்கள் பாலிசி போடுவதை ஆதரிப்பதில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் ஆதரிப்பது டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் இருந்தே ஒரு குறிப்பிட்ட தொகையை டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் பாலிசிதாரரின் மரணத்திற்கு பின் அவரது குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை சேரும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் உயிருடன் இருக்கும் போது இந்த பாலிசி மூலம் எந்த விதமான பயனும் பாலிசிதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறைந்த பாலிசி தொகை, மரணத்திற்கு பின் மிகப்பெரிய தொகை என்பதால் இந்த பாலிசியை பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்யாது, ஆனால் அதே நேரத்தில் மணி பேக் உள்ளிட்ட பல பாலிசிகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும். அந்த வகை பாலிசிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தான் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்பதால் தான் பொருளாதார வல்லுநர்கள் என்ற பாலிசிகளை ஆதரிப்பதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எல்.ஐ.சி தற்போது புதிய டாம் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஐ.சி யுவா டேர்ம் இன்சூரன்ஸ் என்பது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்காக அறிமுகம் செய்யப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை பாலிசி ஆஃப்லைன், ஆன்லைன் என இரண்டிலும் சிறந்த தேர்வை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். முதிர்வு 33 ஆண்டுகள் அல்லது 75 வயது வரை அனுமதிக்கிறது. பாலிசி முதிர்வு தொகை ரூ. 50 லட்சம் முதல் ரூ .5 கோடி வரை இருக்கும். பெண்களுக்கான பிரீமியம் தொகையில் சலுகை உண்டு.