தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்.. தகர்ந்த ஒலிம்பிக் பதக்க கனவு

By John A

Published:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச் சுற்றுவரை சென்றார். இந்தியாவுக்கு எப்படியும் பதக்கத்தை வாங்கிக் கொடுப்பார் என்ற கனவுடன் ஒட்டுமொத்த இந்தியர்கள் கண்ணும் அவரை நோக்கி இருக்க இன்று காலை ஒலிம்பிக் விளையாட்டிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் வினேஷ் போகத் மற்ற நாட்டு வீரர்களை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அமெரிக்க வீராங்கனையை எதிர்த்து தங்கப்பதக்கத்திற்காக அவர் விளையாட இருந்த நிலையில் திடீரென உடல் எடையைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்த வினேஷ் போகத் தற்போது கூடுதலாக 100 கிராம் இருப்பதால் ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவினை எடுத்துள்ளது. தனது எடையைக் குறைக்க வினேஷ் போகத் இரவு முழுக்க கடும் பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் காலை உடற்தகுதி பரிசோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

தேடுபொறியை முன்னிலைப்படுத்த சட்ட விரோதமாக செயல்பட்ட கூகுள்.. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..

கடந்த ஜனவரி மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் தலைநகர் டில்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தினர்.

ஆனால் கடைசி வரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து வினேஷ் போகட் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் இதுவரை பெற்ற பதக்கங்களை ஆற்றில் வீசி விடுவதாக கூறியதை அடுத்து பிரிஜ் பூஷனை அந்தப் பதவியிலிருந்து தூக்கியது மத்திய அரசு.

அதன்பின் மீண்டும் தனது பயிற்சியில் கவனம் செலுத்திய வினேஷ் போகட் ஒலிம்பிக்கில் ஒரு தோல்வியைக் கூட தழுவாமல் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் அவரது தகுதி நீக்கம் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு இரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மேலும் உங்களுக்காக...