சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்: கடைசி தேதி அறிவிப்பு..!

Published:

நடப்பு கல்வி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உட்பட சட்ட கல்லூரிகளில் உள்ள சட்டப் படிப்புகளுக்கு சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மே மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது கடைசி தேதி மே 31 என்ற சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுவதாகவும் மூன்றாண்டு கால சட்டப்படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைப்பில் 10 அரசு சட்ட கல்லூரிகள் ஒரு தனியார் சட்டக் கல்லூரி ஆகியவை உள்ளன. இவற்றில் B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse, ஆகிய 5 ஆண்டு சட்டபடிப்புகளான விண்ணப்பங்கள் மே 15 முதல் வழங்கப்படுகின்றன. எனவே சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் உங்களுக்காக...