பிளிப்கார்ட், அமேசான் போன்ற இ காமர்ஸ் தளங்களில் லேப்டாப் போன்ற பொருள்கள் ஆர்டர் செய்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் சில சமயம் ஒரு வாரம் கழித்து தான் டெலிவரி செய்யப்படும் என்பது பலருடைய அனுபவத்திலிருந்து தெரிந்திருக்கும். ஆனால் பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் லேப்டாப் ஆர்டர் செய்த 13 நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட்டது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தனது பர்சனல் பயன்பாட்டிற்காக ஒரு லேப்டாப் வாங்க முடிவு செய்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு இகாமர்ஸ் இணைய தளங்களில் பார்த்து உள்ளார். அப்போது அவருடைய தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் ஒரு லேப்டாப்பை பிளிப்கார்ட்டில் தேர்வு செய்தார்.
அதில் இந்த லேப்டாப் ஆர்டர் செய்தால் 15 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பு இருப்பதை பார்த்து அவர் ஆச்சரியமடைந்தார். இது உண்மையா என்பது என்று சோதனை செய்ய அவர் அந்த லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் 13 நிமிடங்களில் சரியாக அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.
இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இதற்கு ஏராளமான கமெண்ட் பதிவாகி வருகிறது. இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மகிழ்ச்சி அடைந்த பிளிப்கார்ட் நிறுவனம் அந்த நபருக்கு லேப்டாப் பேக் ஒன்றை இலவசமாக மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. இந்த பதிவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய இரண்டு பதிவுகளும் தற்போது ட்ரெண்டாகி உள்ளன.
கடுமையான போட்டி காரணமாக பிளிப்கார்ட் நிறுவனம் மிக வேக டெலிவரி அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது என்பதும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் மட்டும் 15 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.