வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில், கொடியசைத்த பெண் எம்எல்ஏ சரிதா பதவுரியா என்பவர் திடீரென தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் எட்டாவா சந்திப்பில், நேற்று மாலை 6 மணிக்கு புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிக் கொண்ட நிலையில், முன் வரிசையில் நின்ற பெண் எம்எல்ஏ சரிதா பதவுரியா திடீரென தண்டவாளத்தில் விழுந்தார். இதனை அடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை தூக்கி காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, சமாஜ்வாடி கட்சி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டதால், இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.