கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலை செல்வோருக்கு தெற்கு ரயில்வே கொடுத்த இன்ப அதிர்ச்சி

By Keerthana

Published:

வேலூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் (மெமு) இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் காட்பாடியில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06159), அதேநாள் காலை 10 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை காலை 11.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06160), அதேநாள் மாலை 3 மணிக்கு காட்பாடி சென்றடையும்.

காட்பாடியில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06161), அதேநாள் இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06162), அதேநாட்களில் இரவு 11.45 மணிக்கு காட்பாடி சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06115), அதேநாள் மதியம் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06116), மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

திருவண்ணாமலையில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06165), அதேநாள் மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06166), அதேநாள் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06167), அதேநாள் இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06168), அதேநாள் இரவு 9.20 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.