பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கப்போவது யார்? கமல் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..

By John A

Published:

மேலை வெளிநாடுகளில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் நுழைந்து வெற்றிகரமாக நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது. முதலில் இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது படிப்படியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரபலமான சேனல்கள் ஒளிபரப்பி வந்தன. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 8-வது சீசன் ஆரம்பிக்க உள்ளதால் அதற்கான போட்டியளர்கள் தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கமலின் தொகுத்து வழங்கும் பாணியைப் பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்டு. திரைப் பிரபலங்கள், சமூக, அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று சில நாட்களில் வெளியேறியும் வேறு சில பிரபலங்கள் 100 நாட்களைக் கடந்தும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றி வாகை சூடினர். தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..: கணத்த இதயத்துடன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவதால் பிக்பாஸ் சீசன் 8 என்னால் தொடர முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உங்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களிலும் வந்து சேர்ந்தது மகிழ்ச்சி.

எஸ்.பி.பி-க்குப் போன் செய்த எம்.எஸ்.வி., ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்த அந்த ஒரு நிகழ்வு

நீங்கள் என்மீது பொழிந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நன்றி.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பங்கேற்பாளர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக உருவெடுக்க வைத்தது. ஒரு தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை வழிநடத்தியதில் நான் கற்றுக் கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பிக்பாஸ் சீசன் 8 வெற்றியடைய வாழ்த்துக்கள்” என கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  மேலும் அடுத்த சீசனில் யார் நெறியாளர் என இப்போதே ஆருடம் கூறத் தொடங்கி விட்டனர்.