இறந்தவர் ஆவியாக வந்து அளித்த புகார்.. வாக்குமூலம் வாங்கிய போலீசார்.. நீதிமன்றம் அதிர்ச்சி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர் ஆவியாக வந்து புகார் அளித்துள்ளதாகவும் அதை வாக்குமூலமாக காவல்துறையினர் பெற்று நீதிமன்றத்தில் அந்த வாக்குமூலத்தை சமர்ப்பித்த நிலையில் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புருஷோத்தமன் என்பவர் மீது பிரகாஷ்…

court

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறந்தவர் ஆவியாக வந்து புகார் அளித்துள்ளதாகவும் அதை வாக்குமூலமாக காவல்துறையினர் பெற்று நீதிமன்றத்தில் அந்த வாக்குமூலத்தை சமர்ப்பித்த நிலையில் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புருஷோத்தமன் என்பவர் மீது பிரகாஷ் என்பவர் புகார் அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் புகார் அளித்தவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்த விசாரணை நடந்து வந்த போது நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது தான் புகார் அளித்த பிரகாஷ் என்பவர் புகார் அளிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக புருஷோத்தமன் தரப்பினர் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்ததால்  நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

இதன் மூலம் இறந்த பிரகாஷ் என்பவர் உயிரோடு இருப்பது போல் காண்பிக்கப்பட்டு அவரது புகார் வாக்குமூலம் போலியாக பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ’இறந்த ஒருவர் புகார் அளித்து, அதை எப்.ஐ.ஆரும் பதிவு செய்தது மட்டுமின்றி விசாரணை அதிகாரி, வாக்குமூலமும் வாங்கியிருப்பது விசித்திரமாக உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது ஆவி தான் வந்து புகார் கொடுத்தது போல் தெரிகிறது என்ற கிண்டலுடன் கூறியதோடு இந்த வழக்கின் விசாரணை அதிகாரியிடம் விசாரணை நடத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.