ஐபிஎல் முடிந்ததும் ஜியோ சினிமாவின் அதிரடி அறிவிப்பு.. ஓடிடி போட்டியை சமாளிக்க புதிய திட்டம்..!

Published:

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண அனுமதித்த ஜியோ சினிமா ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள அதிரடி முடிவெடுத்து சில ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களுடன் போட்டி போட ஜியோ சினிமா முடிவு செய்துள்ளது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோசினிமா, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், வெப்ஸ்ட்ரோரி போன்றவை அடங்கிய NBCUniversal உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜியோ சினிமா சந்தாதாரர்களுக்கு The Office, Downton Abbey மற்றும் Suits போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் அதேபோல், Fast X, Oppenheimer போன்ற திரைப்படங்களை காணும் வகையிலும் இருக்கும்.

jio cinema

சமீபத்திய மாதங்களில் ஜியோசினிமா கையெழுத்திட்ட இரண்டாவது பெரிய ஸ்ட்ரீமிங் ஒப்பந்தம் இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம், இந்நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்றவற்றுடன் போட்டியிடும் ஜியோசினிமாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தங்கள் பார்க்கப்படுகிறது. இந்திய ஸ்ட்ரீமிங் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஜியோசினிமா தன்னை ஒரு முன்னணி ஓடிடி தளமாக நிலைநிறுத்த விரும்புகிறது என்பதையே இந்த ஒப்பந்தம் காண்பிக்கிறது.

NBCUniversal உடனான ஒப்பந்தம் ஜியோசினிமாவிற்கு ஒரு பெரிய பாசிட்டிவ் ஆகும். NBCUniversal என்பது ஒரு பெரிய ஹாலிவுட் ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்துடன் ஜியோசினிமா ஒப்பந்தம் செய்துள்ளதால் உலகின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களஈ ஜியோசினிமா வாடிக்கையாளர்கள் இனி பார்க்க முடியும்.

இந்த ஒப்பந்தம் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ அனைத்திற்கும் ஒரு சரியான போட்டி நடவடிக்கை ஆகும். மேலும் வரும் ஆண்டுகளில் ஜியோசினிமா இன்னும் பல ஒப்பந்தங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...