உங்கள் ஜியோ சிம் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டதா? அப்படியானால், நீங்கள் தனியாக இல்லை. இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பயனர்கள், தங்கள் நெட்வொர்க் முற்றிலும் முடங்கியிருப்பதாகவும், சிக்னல் இல்லை, இணையம் இல்லை, எந்த விளக்கமும் இல்லை என்றும் டவுன்டிடெக்டரில் தொடர்ச்சியாக புகார்களை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஜியோ நெட்வொர்க் முடங்கியது குறித்த புகார்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரே மணிநேரத்தில், 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிக்கல்கள் இருப்பதாக கூறியுள்ளனர். இது நாடு முழுவதும் ஜியோ நெட்வொர்க் செயலிழப்பை எதிர்கொண்டது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
கமெண்ட்ஸ் பிரிவில், இந்த செயலிழப்பு குறித்துப் பல அதிருப்தியடைந்த ஜியோ பயனர்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்து வருகின்றனர். தங்கள் போன்கள் தொடர்ந்து 4G மற்றும் 5G க்கு இடையில் மாறிக்கொண்டிருப்பதாகவும், ஆனால் சரியான நெட்வொர்க்குடன் இணைக்க முடியவில்லை என்றும் பயனர்கள் கூறுகின்றனர்.
“ஃபைபர் மற்றும் மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட அனைத்து ஜியோ சேவைகளும் கேரளாவில் முடங்கியுள்ளன #JIO #JIOFIBER,” என்று ஒரு பயனர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். விரக்தியடைந்த பயனர்கள் தங்கள் கோபத்தை மேலும் பல ட்வீட்கள் மற்றும் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பயனர்: “JioCare அழைப்பு சேவை, இணைய சேவை வேலை செய்யவில்லை. எனது ரீசார்ஜை திரும்ப செலுத்துங்கள் @TRAI.”
மற்றொருவர் எழுதினார்: “@JioCare @reliancejio 2 நாட்களாக இணையம் வேலை செய்யவில்லை. ஏர்டெல் கூட செயலிழந்தது, ஆனால் அவர்கள் சில மணிநேரங்களுக்குள் சரி செய்தனர். இணையத்தை வழங்க முடியாத நாட்களுக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டுமா?”
“@caparveen01 @JioCare ஜியோ ஃபைபரில் இணைப்பு இல்லாதது குறித்து ஜியோ எண் 0124 3532272 இல் புகார் அளித்துள்ளேன், ஆனால் புகார் அளித்த பிறகு, ஏன் வாடிக்கையாளர் சேவை ஆதரவு கிடைக்கவில்லை? புகாரை கண்காணிக்க பகிரப்பட்ட இணைப்பும் வேலை செய்யவில்லை, ஏனெனில் ஜியோ ஃபைபரில் இருந்து இணைப்பு இல்லை, எரர் காட்டுகிறது,” என்று மற்றொரு பயனர் புகார் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், இரண்டு வாரங்களாக இணையம் முற்றிலும் முடங்கியுள்ளதாகவும், 4G மற்றும் 5G இரண்டும் வேலை செய்யவில்லை என்றும் கூறினார். குஜராத்தின் வதோதராவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு பயனர்களால் எதையும் பதிவிறக்க முடியவில்லை.
மற்றொரு பயனர், தங்கள் ஜியோஃபைபர் இணைப்பு காலை முதல் முடங்கியிருப்பதாகவும், ஒரு பொறியாளர் வந்து பார்த்த பிறகும், மாலை 5:30 மணி வரையிலும் சரிசெய்யப்படவில்லை என்றும் புகாரளித்தார். இன்னொரு பயனரோ, ‘ஜியோ இந்தியாவுக்கு வந்த இன்னொரு கிழக்கிந்திய கம்பெனி’ என்று கூறியுள்ளார்.
‘எல்லோரும் மொத்தமாக ஜியோவுக்கு மாறும்போதே தெரியும், இதெல்லாம் நடக்கும் என்று’ என்று ஒரு பயனரும், நன்றாக சேவை செய்து கொண்டிருந்த டாடா, ஏர்செல் போன்ற நிறுவனங்களை வீட்டுக்கு அனுப்பினோமே, நமக்கு இதுவும் வேண்டும், இன்னுமும் வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
