பொறியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த முடிவுகளை எந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை படிப்புகளில் சேர, ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு வகைகளாக விரிவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை ஜேஇஇ தேர்வு முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவை jeemain.nta.nic.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை பார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, செக்யூரிட்டி கேப்சாவையும் பதிவு செய்தால் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது. தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வுகளை விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தேர்வு முடிவில் சந்தேகம் இருந்தால், மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.