தமிழகத்தின் இரும்புப் பெண்மணின்னா நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தனது அசாத்திய திறமையால் படிப்படியாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனார்.
அவருடைய நடிப்பு சினிமாவிலும் வியக்க வைத்தது. திரையுலகில எம்ஜிஆருடன் ஜோடியாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதே நேரம் அரசியலிலும் அவரது திறமை வியப்பில் ஆழ்த்தியது. யாருக்கும் அஞ்சாத சிங்கப்பெண்மணியாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவர் இளம் வயதில் அப்படிப் பயந்துள்ளார். அதுவும் காதலுக்கு யார் பயப்படுவார்? இவர் பயந்து இருக்கிறார் என்றால் அது என்ன சம்பவம்னு பார்க்கலாமா…
நடிகையாக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் காதலைப் பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டார்களாம். அப்போது இந்தக் காதலைப் பற்றிப் பேசவே பயமாக இருக்கிறது. என்னை சம்பந்தப்படுத்தி இதுபோன்ற காதல் விஷயங்களைப் பல பத்திரிகைகளில் தாறுமாறாகப் போட்டுருக்காங்க. பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என கேட்டாராம்.
அதற்கு ஜெயலலிதா நான் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் வீரர் பட்டோடியைக் காதலித்தேன். ஆனால் அவர் சர்மிளாதாகூரைத் திருமணம் செய்வதற்கு முன்பு என்று சொன்னாராம். அதன்பிறகு தான் காதலுடன் சம்பந்தப்படுத்தி ஜெயலலிதாவைப் பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் வந்தனவாம். அதற்குப் பின்னாலே காதலைப் பற்றிப் பேசுவதற்கே எனக்குப் பயமாகி விட்டது என்று ஒரு பத்திரிகையில் கருத்தைப் பதிவு செய்துள்ளார் ஜெயலலிதா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

