இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது itel நிறுவனம்.. விலை ரூ.7000 தானா?

By Bala Siva

Published:

இந்தியா என்பது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்பதால் பல நிறுவனங்கள் இந்தியாவை குறி வைத்து தான் ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சாம்சங், ரியல் மீ, ஒன் பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது புதுப்புது மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் உலக அளவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான itel நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட் போன் வெறும் 7000 ரூபாய் என்பது ஆச்சரியத்தக்கஅம்சம் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் குறித்த முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.

இந்தியாவின் முதல் itel ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,000 என்று கூறப்படுகிறது. இந்த போன் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் HD+ டிஸ்ப்ளே, 8GB ரேம், Unisoc சிப்செட் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த போனின் முக்கிய அம்சங்கள் இதோ:

* 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* யுனிசாக் டைகர் டி610 பிராஸசர்
* 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
* 8MP மற்றும் 2MP கேமிரா
* 5எம்பி செல்பி கேமிரா

அதிக ரேம் கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடும் பட்ஜெட் உணர்வுள்ள நுகர்வோருக்கு itel A60s ஒரு நல்ல தேர்வாகும். இந்த போனில் பெரிய டிஸ்பிளே, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் நீண்ட கால பேட்டரி ஆகியவையும் உள்ளன.