75 ரூபாய் நாணயம் மக்கள் பயன்பாட்டிற்க்காகவா அல்லது பார்வைக்கு மட்டுமா? தகவல் இதோ!

By Velmurugan

Published:

புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தின் திறப்பு விழா மே 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நினைவாக சிறப்பு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நாணயத்தின் எடை 34.65 முதல் 35.35 கிராம் வரை இருக்கும் என நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம் பெற்றுள்ளது. இதன் கீழே 2023 என பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அசோக தூணில் உள்ள சிங்கமுகம் இடம்பெற்றுள்ளது. இதன் இடது புறம் பாரத் என்று ஹிந்தியிலும் வலது புறத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

ரூபாயின் அடையாள குறி மற்றும் அதன் மதிப்பு 75 என சிங்கமுகத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல் மற்றும் ஐந்து சதவீதம் துத்தநாகம் என நான்கு உலோகங்களின் கலவையை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நினைவு நாணயங்கள் என அழைக்கப்படும் இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்படுவதில்லை. இவற்றை பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்த முடியாது.

இது போன்ற சிறப்பு நாணயங்களை வெளியிடும் வழக்கம் 1964 ஆம் ஆண்டில் இருந்து வருகிறது. இதுவரை 150 நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இந்த நாணயங்களை வாங்கலாம். https://www.indiagovtmint.in என்ற அரசாங்க இணையதளத்தில் இந்த நாணயத்தை வாங்கலாம்.

மக்களே… வெயில் குறித்து எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

இந்த நாணயத்தை நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது செக் மூலமாகவோ இந்த நாணயத்தை வாங்க முடியாது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, டிமாண்ட் டிராப்ட் மூலம் இந்த நாணயத்தை வாங்கலாம். மேலும் 10 நாணயங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் அதற்கு உங்களுடைய பான் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.