மும்பையில் உள்ள IRCTC மேற்கு மண்டல அலுவலகம், சிறப்பு சர்வதேச சுற்றுலா திட்டங்களை உருவாக்கியுள்ளது: இந்த திட்டங்கள் குறித்த தகவல் இதோ:
ஐரோப்பா மற்றும் லண்டன் – மே 9 முதல் மே 24, 2025: 14 இரவுகள், 15 நாட்கள்: ₹412400
துபாய் – ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 14, 2025: 4 இரவுகள் 5 நாட்கள்: ₹ 76900
ஸ்ரீ ராமாயண யாத்திரை – இலங்கை – மே 6 முதல் மே 12, 2025 – 6 இரவுகள் 7 நாட்கள்: ₹ 64500
IRCTC மேற்கு மண்டலத்தின் குழு பொது மேனேஜர் கவுரவ் ஜா இந்த சுற்றுலா திட்டம் குறித்து கூறியதாவது: “இந்த சுற்றுலா தொகுப்புகள் மற்ற சர்வதேச சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில், ஆனால் மிகத் தரமான விருந்தோம்பல் சேவைகளுடன் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் IRCTC இணையதளத்தில் வெளியான உடனே பயணிகள் அதிக ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எப்படி முன்பதிவு செய்யலாம்?
பயணிகள் தங்களின் சுற்றுலா முன்பதிவை மேற்கொள்ள முதலில் IRCTC அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது இந்திய முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் அல்லது WhatsApp/SMS மூலம் – 8287931886 விண்ணப்பிக்கலாம்.
இந்தக் குறைந்த செலவில் தரமிக்க சுற்றுலா தொகுப்புகள் மூலம், இந்திய குடும்பங்களுக்கு சர்வதேச பயணத்தை IRCTC மேலும் அணுகலாக மாற்றுகிறது.